சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், அரூரில் அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சம்பத்குமார், அரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பசுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.