மொரப்பூர் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

மொரப்பூர் அருகே உள்ள ஓபிளிநாயக்கன்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-11-08 15:45 GMT

மொரப்பூர் அருகே உள்ள ஓபிளிநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்.

தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் அருகே உள்ள ஓபிளிநாயக்கன்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி 2-ம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரூர் கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் கே.வில்வம் முகாமினை தொடங்கி வைத்தார். மொரப்பூர் கால்நடை மருத்துவர் டாக்டர் பி.வெற்றிவேல், கால்நடை ஆய்வாளர் தனலட்சுமி,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மொரப்பூர் கால்நடை மருத்துவமனை எல்லைக்குட்பட்ட மொரப்பூர், தொப்பம்பட்டி, தாசர ஹள்ளி, கொசப்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் சேர்ந்த 21-வருவாய் கிராமங்களிலுள்ள 5258 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மொரப்பூர் கால்நடை மருத்துவர் வெற்றிவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News