பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மஞ்சவாடியில் திமுக முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய மஞ்சவாடி பகுதியில் 18வது வார்டு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருக்கு திமுக முன்னாள் எம் எல் ஏ வாக்கு சேகரித்தார்.

Update: 2021-10-05 06:00 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மாவட்ட ஊராட்சி குழு 18-ஆவதுவார்டு இடைத்தேர்தல் வேட்பாளர் லதா தாமரைச் செல்வன் அவர்களை ஆதரித்து, மஞ்சவாடி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆர். வேடம்மாள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோம்பூர், கோம்பூர் கிழக்குத்தெரு, கோம்பூர் மேற்கு தெரு, மஞ்சவாடி, லட்சுமாபுரம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தேசிங்குராஜன், சேகர், முன்னாள் நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றியபொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், ஆதிமூலம், சஞ்சீவன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாட்டரசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சி.சிட்டிபாபு ,மருதிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மன், கருணாகரன், பிரவீன், சுரேஷ்மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News