அரூர் அருகே குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து அரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-09-25 08:45 GMT

அரூர் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

தர்மபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சேலம் மாவட்டம் அயோதியபட்டினம் முதல் வாணியம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் சுமார் 10 அடி தூரத்திற்கு பீச்சி அடித்தது வெளியேறியது.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறிவருவதாக பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் களுக்கு புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அலுவலர்கள் தண்ணீர் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 3 மணி நேரம் தண்ணீர் வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல தண்ணீர் ஓடியது.

குழாய் உடைப்பின் காரணமாக தொட்டம்பட்டி, நாச்சினம்பட்டி, சின்னகுப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கோபாலபுரம் ஜம்மனஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அதிகாரிகள் உடைந்த குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சீர் செய்யும் பணி இன்று அல்லது நாளை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News