கடத்தூர் அருகே தி.மு.க.அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கடத்தூர் அருகே தி.மு.க.அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-02 17:09 GMT

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே  ஒபிளிநாயக்கன் அள்ளி ஊராட்சி கெடகாரஅள்ளி, மங்களம்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் ஈராண்டு சாதனை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மனோகரன் எம்.எல்.ஏ , முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபுராஜசேகர், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஞானம்வடிவேல் வரவேற்றார்.இதற்கான ஏற்பாடுகளை கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவபிரகாசம் செய்திருந்தார். மாவட்ட ஓட்டுனர் அணி அமைப்பாளர் வடிவேல், அறங்காவலர் குழு தலைவர் கௌதமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுகுணா ஆறுமுகம், மாரிமுத்து, புருஷோத்தமன், ராஜேந்திரன், அன்பரசு, கவுன்சிலர்கள் பச்சை யப்பன், சக்திவேல், முருகன், தங்கராஜ், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராள மானோர் பங்கேற்றனர்.

அதே போல் கடத்தூர் நகர தி.மு.க சார்பில் உடனடிப்பட்டி சாலையில் நகர தி.மு.க சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செயலாளர் மோகன் செய்திருந்தார். பேரூராட்சி தலைவர் கேஸ் மணி மற்றும் பொருப்பாளர்கள் பங்கே ற்றனர். அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News