அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழப்பு
அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.;
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.ஆண்டியூரை சேர்ந் தவர் திருப்பதி, 28; இவரது மனைவி வினிதா; தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன், பிறந்த இரண்டாவது குழந்தை கனிஷ்காவிற்கு கடந்த, 30ந்தேதி தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மீண்டும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது. புகார் அடிப்படையில், கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.