அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மொரப்பூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு பொன்விழா கெலவள்ளியில் நடைபெற்றது.;
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அ.தி.மு.க.வின் 50-வது ஆண்டு பொன்விழா கெலவள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
வேலூர் மண்டல செயலாளர் ஜனனி.பி.சதீஷ்குமார், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் கே.கே.தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொரப்பூர் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.சம்பத்குமார் ஆகியோர் மரக்கன்றுகள், முகக் கவசம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள், தூய்மை பணியாளர்களுக்கு இலவச புத்தாடை மற்றும் அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ஜி.மதிவானண்,அ.செல்வம்,ஆர்.ஆர்.பசுபதி,ஊராட்சி மன்ற தலைவர்கள் சுசீலா சிவராஜ்,செல்வம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமஜெயம், சரவணன்,கூட்டுறவு சங்க தலைவர் எம்.சிங்காரம்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி காளியப்பன்,நிர்வாகிகள் வேலாயுதம்,வெள்ளையன்,முருகன் மற்றும் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில்தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.