அரூர் அருகே விவசாயி மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்கு
அரூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.;
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குரும்பட்டியை சேர்ந்தவர் சேட்டு, வயது 50, விவசாயி; இவருக்கும், பக்கத்து நிலத்தை சேர்ந்த சண்முகம், வயது 37, என்பவருக்கும் இடையே நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த மாதம், 27ந்தேதி மாலை, வீட்டில் இருந்த சேட்டுவை சண்முகம், அவரது மகன் குரு, வயது 19, பெரியதம்பி,வயது 45, சவுந்தரி, வயது 35, கோவிந்தசாமி, வயது 50, உள்பட, ஏழு பேர் தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சேட்டு அளித்த புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் சண்முகம் உள்ளிட்ட, ஏழு பேரை தேடி வருகின்றனர்.