கோட்டப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி அரசு ஊழியர் பரிதாபமாக பலியானார்.
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்துள்ள பயர்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அழகேசன் (33). இவருக்கு ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணமாகி புவனேஸ்வரி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சுதர்சன், பூர்ணா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். அழகேசன் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அழகேசன் சம்பவத்தன்று மாலையில் வீட்டின் மின் மோட்டார் பழுதானதால் அதனை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அழகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.