விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகை
விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியின மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் மங்களூர் ஒன்றியம் சிறுப்பாக்கம் கிராமத்தில் இந்து ஆதியன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சுமார் பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் தனி வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த பழங்குடி இன மக்கள் இன்று விருத்தாசலம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.