தற்காலிக ஆசிரியர்களுக்கு தனது சொந்த பணத்தில் சம்பளம் வழங்கிய தலைமையாசிரியர்
விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது சொந்த பணத்தில் இருந்து தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி அசத்தினார்;
கொரோனா தொற்று நோய் காரணமாக .2020ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.
2021ஆம் ஆண்டு இரண்டாவது அலை வீசத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி, கோவில்கள், திரையரங்குகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டன. அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தினக்கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தற்கால ஆசிரியர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பிரேம்குமார், தனது சொந்த பணத்தில் ஒரு லட்சத்து பதினேழாயிரம் ரூபாயை சம்பளமாக வழங்கி அசத்தினார்.
இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்களும்,பொது மக்களும் தலைமை ஆசிரியர் பிரேம்குமாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.