வால்பாறை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
கோவை மாவட்டம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.;
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவைக்கு வருகை தந்தார். கோவை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, வால்பாறை பகுதிக்கு சென்ற அமைச்சர், ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளை, அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், நேரில் ஆய்வு செய்தார். மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள், பள்ளிகளின் நிலை, மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும் பள்ளிகளின் தேவையான வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் விவரமாக அமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனிருந்தனர்.