மாணவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி விட்டது : எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

Coimbatore News- மாணவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி விட்டது என, எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டினார்.

Update: 2024-02-17 14:15 GMT

Coimbatore News- மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கிய வேலுமணி

Coimbatore News, Coimbatore News Today- கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் குனியமுத்தூர் பகுதி அதிமுக அலுவலகத்தில் ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக விலையில்லா வினா- விடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். புத்தகங்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவியர்கள் எஸ்.பி.வேலுமணியுடன் குழுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, “26 வருடமாக விலையில்லா வினா- விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி முதல் மிதிவண்டி வரை மாண்புமிகு அம்மா வழங்கினார். அவரை பின்பற்றி எடப்பாடியார் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார். ஆனால் தற்போதைய திமுக அரசு மாணவர்களுக்கு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளட்ட இடங்ககில் உள்ள அரசு பள்ளிகளிலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள், நவீன உபகரணங்க்கள் அனைத்தும் நமது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினா- விடை வங்கி புத்தகமானது மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடந்த முறை தேர்ச்சி பெற்ற பல மாணவர்களும் 80 சதவிகிதம் வரை அதிக மதிப்பெண்கள் பெருவதற்கு பேருதவியாக இருந்ததாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து ஐ.எ.எஸ்.ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டும் என்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News