தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த விரக்தியில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த சென்றதால் விரக்தி அடைந்த சந்தோஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-01-11 07:15 GMT

ஆலாந்துறை காவல் நிலையம்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள புள்ளகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ். 35 வயதான இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷிற்கு குடிபழக்கம் இருந்த நிலையில், மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட பவித்ரா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்த சென்றதால் விரக்தி அடைந்த சந்தோஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டர்.

இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தோஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

இதேபோல ஆத்துப்பாலம் புட்டுவிக்கி பாலம் சந்திப்பில் குனியமுத்தூர் தலைமை காவலர் தினேஷ்குமார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பயணம் செய்த மசக்காளிபாளையம் சுந்தரம் வீதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், சுகுணாபுரம் ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்த உமர்பரூக் என்பவருக்கும் இடையே வாகனம் ஓட்டி வந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் நடுவே கார்களை நிறுத்தி இருவரும் சண்டையிட்டுள்ளனர். பாலக்காடு பிரதான சாலையில் நடந்த இந்த சண்டை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசியில் நின்றன. சண்டை முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் இதில் ஒருவரை ஒருவர் தங்களிடம் இருந்த குடிநீர் பாட்டில்கள் கொண்டு தாக்கி கொண்டதால் கார் கண்ணாடிகள் உடைந்தது.

இதனையடுத்து பணியில் இருந்த காவலர் தினேஷ்குமார் இரு தரப்பினர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து, இருவரும் குனியமுத்தூர் காவல் நிலையம் அழைத்து செல்லபட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.

Tags:    

Similar News