விசைத்தறிகளை இயக்க அனுமதி கேட்டு கோவை கலெக்டரிடம் மனு
கொரோனா ஊரடங்கால் விசைத்தறிகள் இயங்காமல் உள்ள நிலையில், அவற்றை இயக்க அனுமதிக்க கேட்டு, கோவை கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு அளித்தனர்.;
கோவை ஆட்சியரை சந்தித்து, மனு அளித்த விசைத்தறி உரிமையாளர்கள்.
கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விசைத்தறி தொழில் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விசைத்தறிகள் இயக்க அனுமதிக்குமாறு, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் முடங்கி, வாழ்வாதாரம் இழந்துள்ள விசைத்தறி உரிமையாளர்களுக்கு, மீண்டும் வேலை செய்ய உடனடியாக அனுமதி தருமாறு, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.