கோவையில் போதை ஊசி செலுத்தும் இளைஞர்கள் :வெளியான அதிர்ச்சி வீடியோ
கோவை மாநகரில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.;
போதைஊசி செலுத்தும் இளைஞர்
சமீபகாலமாக, கோவை மாநகரில் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. வலி நிவாரணத்திற்கான மாத்திரைகளை வாங்கி அதை "சலைன்" எனப்படும் டிஸ்டில்டு வாட்டரை கலந்து, போதை ஊசியாக மாற்றி, போட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கோவை புல்லுக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், போதை ஊசி போட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதில் இளைஞர்கள் இருட்டான பகுதியில் கூட்டமாக அமர்த்து, போதை ஊசியை தயாரித்து ஊசி போட்டுக்கொள்வது பதிவாகி இருந்தது. ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை மாநகரில் போதை ஊசி விற்பனை நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு , தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விரைவில் போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யவும், காவல்துறையினர் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.