அப்பார்ட்மெண்ட் குடிநீர் தொட்டிக்குள் புகுந்த கழிவு நீர்: குடியிருப்புவாசிகள் அவதி

மழை நீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து குடிநீர் தொட்டிக்குள் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;

Update: 2024-10-13 03:30 GMT

அபார்ட்மெண்ட்டிற்குள் புகுந்த கழிவுநீர் 

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிமடையில் ஆகாஷ் வில்லா மற்றும் அப்பார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. வில்லாக்கும் அப்பார்ட்மெண்டுக்கும் இடையே பொதுவான கழிவு நீர் குழாய் உள்ளது. அந்த வில்லா சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆகையால் இந்த அடுக்குமாடி குடியிருப்பு, வில்லா குடியிருப்பு மீது கோயமுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது . நீதிமன்றத்தில் உள்ளதால் அதிலிருந்து இருவருக்கும் பிரச்சனைகள் உருவாகியுள்ளன அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் கம்பளைண்ட் கொடுத்து வந்தனர்.

நேற்று இரவு மழை பெய்த காரணத்தினால் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கழிவு நீர் செல்லும் வழியில் வில்லா அசோசியேஷன் நிர்வாகிகள் வழியை அடைத்து விட்டனர். ஆகையால் மழை நீர் கழிவுநீர் நீர் எல்லாம் அப்பார்ட்மெண்டுக்குள் உள்ளே புகுந்து குடிநீர் 4000 லிட்டர் தொட்டிக்குள் புகுந்து தண்ணீர் எல்லாம் மாசுபட்டு விட்டன.

குடிப்பதற்கு வெளியே தண்ணி கேன் ஆர்டர் செய்து அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்கள். இதில் சில பேருக்கு வாந்தி வருவதாக அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News