தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மாற்றும் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்..!
இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தனித்துவமும் சகோதரத்துவ வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.;
கோவை பீளமேடு பகுதியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்ப்ப்ப்து அவர் பேசுகையில், :இந்தியாவிற்கு புதிய விடியலை தரவிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன், இந்தியா கூட்டணியை அமைத்த சிற்பி, இந்தியாவின் நம்பர் ஒன் முதன்மை மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அமைத்த கூட்டத்தை பார்க்கும்போது பிரம்மாண்டமான வெற்றி திசையில் இந்தியா கூட்டணி என்பது உறுதியாகிறது. இது தேர்தல் அல்ல இது இந்த இனத்திற்கான போர், ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கான நடைபெறும் இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தனித்துவமும் சகோதரத்துவம் வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
இந்தியாவின் மத நல்லிணக்கம், சகோதரத்துவம் செழித்தோங்க வேண்டும். குறிப்பாக இப்போது நடைபெற உள்ள போரில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளும் வெற்றி பெறும். பெண்களின் விடியல் பயணம், பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெரும் அற்புதமான திட்டம், அடுத்த கட்டமாக பெண் விடுதலைக்காக நூறாண்டுகளாக பயணிக்கும் திமுகவின் சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் திட்டம் படிக்கும் பெண் பிள்ளைகளுக்காக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பான திட்டத்தையும் சொல்லி வாக்குகள் கேட்கலாம். தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு நடத்துவதற்கு இந்தத் திட்டங்கள் உதவியாக இருக்கும். காலை உணவு திட்டமானது எந்த ஒரு அரசும் இதுவரை கொண்டு வந்ததில்ல. இத்திட்டத்தை பார்த்து கனடா நாட்டிலும் அதை செயல்படுத்துகிறார்கள். இதை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகள் சேகரிக்கலாம்.
கடந்த பத்து ஆண்டு காலம் இரண்டு ஆட்சி செலுத்திய இவர்கள் எப்படி மக்களை சந்தித்து வாக்குகள் கேட்கப் போகிறார்கள்? மத்தியிலும் மாற்றம் வரம் வேண்டும். ஆட்சிக்கு வரும்போது நாற்பது ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது 100 ரூபாய் பெட்ரோல் விலை விற்கும் பொழுது அது அப்படித்தான் நடக்கும் என்கிறார்கள். எதற்காக இந்த அரசை மாற்ற வேண்டும், தற்போதுள்ள அதிமுக கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கும் இல்லாமல் தனித்து நின்று பெரும் ஓட்டுகள் அனைத்தும் வீணான வாக்குகள் ஆகும்.
பேரிடர் போன்ற பெரும் துயரங்கள் வந்த போதிலும், ஒன்றிய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் வருவதில்லை. இதுவரை எப்போதாவது வருகின்ற பிரதமர் தற்போது தேர்தலை ஒட்டி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் தற்போது ஐந்து முதல் எட்டு முறை கோவை வந்து செல்வது, ரோடு ஷோ நடத்துவது என்பதெல்லாம் மக்களை முட்டாள்கள் ஆக்குவதாகும். இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கும் பட்சத்தில் மகத்தான பல வளர்ச்சி திட்டங்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக கோவைக்கு கிடைக்கும்.
பாஜகவினர் பொய் செய்தி பரப்பி வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு எது செய்ய வேண்டும் வேண்டாம் என எதுவும் தெரியாமல் போய் பிரசாரத்தை பரப்பி வருகின்றனர், பாஜகவினர். எனவே பாஜகவினரை நிராகரிங்கள் வளர்ச்சியான பாதைக்கு மாற்றும் இந்தியா கூட்டணிக்கு தங்கள் பெருவாரியான வாக்குகளை செலுத்துங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரான கணபதி ராஜ்குமாரை வெற்றியடைய செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.