குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட வெள்ளிக்கோல் வரையன் பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு

Coimbatore News- குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட வெள்ளிக்கோல் வரையன் பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Update: 2024-06-17 08:00 GMT

Coimbatore News- வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

Coimbatore News, Coimbatore News Today- கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தொட்டிக்கு அடியில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாம்பு பிடி வீரரான வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து அப்பகுதிக்கு சென்ற சித்ரன், அங்கு பூந்தொட்டிக்கு அடியில் இருந்த பாம்பை பார்த்தார். அப்போது அந்த பாம்பு விஷமற்ற அரிதாக தென்படும் மரமணு குறைபாடுடைய வெள்ளி கோல் வரையன் பாம்பு என்பது தெரியவந்தது. இதனை ஓநாய் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

வழக்கமாக வெள்ளிக்கோல் வரையன் பாம்புகள் உடல் மீது கட்டுக் கட்டாக தழும்பு பட்டைகள் இருக்கும். ஆனால் நாகப்பாம்பில் மரபணு குறைபாடுடன் உள்ள பாம்பு வெள்ளை நாகம் போல, மரபணு குறைபாடுடன் உள்ள வெள்ளிக்கோல் வரையன் பாம்புகளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல இருக்கும்.

இந்த நிலையில் மரபணு குறைபாடு உள்ள வெள்ளிக்கோல் வரையன் பாம்பு, மசக்காளிபாளையத்தில் தென்பட்டு இருக்கிறது. இந்த பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த பின்னர், வனப்பகுதியில் விடப்பட்டது. இது போன்ற பாம்புகள் தென்படும் பொழுது, பொதுமக்கள் அதனை அடிக்கவோ விரட்டவோ கூடாது எனவும், பாம்பு பிடி வீரர்களுக்கு வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய தகவல் தரும் பட்சத்தில், அது பத்திரமாக மீட்டு, பொது மக்களுக்கும் பாம்புகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் அதன் வாழ்விடத்தில் விடப்படும் என்றும் பாம்பு பிடி வீரர் சித்ரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News