கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

கோவை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.;

Update: 2024-10-14 12:45 GMT

கோவை மாநகராட்சி பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இதன் துவக்க விழா சித்தாபுதூர் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இந்த கட்டணமில்லா நீட் பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொண்டு நன்கு படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நடைமுறை வகுப்புகள் பாதிக்காத வண்ணம் வாரம் இரு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும் கோவையில் மாநகராட்சியில் பல்வேறு பள்ளிகளில் இந்த வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்களை இப்பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்புகளை நடத்த உள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து செலவு மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம் காளீஸ்வரன் மேம்பாலம் ஆகிய இரண்டு மேம்பாலங்கள் தான் அதிகளவு மழை நீரால் சூழ்வதாகவும் அதனையும் வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளதாக தெரிவித்தார். இனிமேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். ஆவாரம்பாளையம் பகுதியில் 30 பேரை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும் அவர்களுக்கான உணவு வசதி ஆகியவற்றை செய்து தந்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்கள் இழந்த ஆவணங்களை புத்தகங்களையும் உடனடியாக தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காாமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News