கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; ஆர்வத்துடன் பங்கேற்கும் மக்கள்

Coimbatore News- புத்தகத் திருவிழா இன்று முதல் ஜூலை-28ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது;

Update: 2024-07-19 16:00 GMT

Coimbatore News- புத்தகத் திருவிழா கோவையில் துவங்கியது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு 8வது ஆண்டு கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டனர். இந்தப் புத்தகத் திருவிழா இன்று முதல் ஜூலை-28ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். 285 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தினம்தோறும் பல்வேறு இலக்கிய கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்வுகள், இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட நூலக துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து நடத்தும் இப்புத்தக திருவிழாவில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இலவசமாகும். கடந்த ஆண்டு சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையானது. அதேபோல் இந்த ஆண்டும் புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News