பெயிண்டரை அடித்துக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை

ஆத்திரத்தில் பெயிண்டரை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-10-18 12:30 GMT

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பத்குமார் 

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 32). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த பெயிண்டரான சீனிவாசன் (55) என்பருடன் சேர்ந்து சேவல் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தார். 16-7-2021 ம் தேதி சில சேவல்கள் நோய் தாக்கி இறந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக சீனிவாசனுக்கும், சம்பத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சம்பத்குமார் நான் கொடுத்த சேவல்களை விற்று விட்டு இறந்து போனது என்று பொய் சொல்கிறாயா? என்று கூறியவாறு ஆத்திரத்தில் அங்கு இருந்த குக்கர் மூடியை எடுத்து சீனிவாசன் தலைமையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இதை தடுக்க வந்த சீனிவாசனின் உறவினர் கார்த்திகேயன் (35) என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் காவல் துறையினர் கொலை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்த சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை உள்பட பல்வேறு விசாரணைகள் நிறைவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சம்பத்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு அளித்தார்.

Tags:    

Similar News