3 கோவில்களில் நகை திருடிய நபர் கைது
சத்தம் போட அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற நபரை துரத்திப் பிடித்தனர்.;
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாளையததில் கோபால கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை கோவிலை திறந்த பூசாரி கண்ணன் பூஜை செய்து விட்டு நகர்ந்துள்ளார். அப்போது சாமி கும்பிட வந்த நபர் ஒருவர் திடீரென கோவிலை விட்டு வேகமாக நகர சந்தேகமடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தாலிக் காசுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைத்தார். உடனடியாக சத்தம் போட அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற நபரை துரத்திப் பிடித்தனர். இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பதும் அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்காசை திருடியதும் தெரியவந்தது.
அம்மன் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பகவதியம்மன் மற்றும் கருப்பாரயன் கோவிலை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டதோடு கடந்த வாரத்தில் தங்களது கோவிலில் திருட்டு போனதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் செந்தில்பிரபுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று கோவில்களிலும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்களை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் இரண்டு கிராம் தங்கத்தை தவிர மற்ற அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்பிரபுவை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.