ஆனைமலையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி

Tirupur News. Tirupur News Today- ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

Update: 2023-05-24 02:57 GMT

Tirupur News. Tirupur News Today- வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர். 

Tirupur News. Tirupur News Today- உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில், நேற்று முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 29 -ம் தேதி வரை நடக்க உள்ளது. உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது முதல் மூன்று நாட்களில், காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும். அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும்.

மேலும் யானை லத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, நீலகிரிமந்தி, சிங்கவால்குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பு நடத்தப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவரவகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இறுதி நாளான 29-ம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

உடுமலை வனச்சரகம் மானுப்பட்டி பிரிவு ஈசல் தட்டு கிழக்கு சுற்றில் ஏழுமலையான் மற்றும் காமனூத்து சரக பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் ஆய்வு செய்தார். அப்போது புலி, சிறுத்தை உள்ளிட்ட பிற மாமிச உண்ணிகள் பெரிய தாவர உண்ணிகள் தடயங்கள் குறித்த கணக்கீடு பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறுத்தையின் காலடித்தடம் மற்றும் எச்சம், யானைகள் நடமாட்டம் குறித்தும் பதிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்வின் போது வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News