மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
ஆழியாறு, பொள்ளாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.;
குரங்கு நீர்வீழ்ச்சி -கோப்புபடம்
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. எனினும் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நேற்று பகல் நேரத்தில், பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஆழியார், பொள்ளாச்சியில் கனமழை பெய்தது.
இதனால், வறண்டு கிடந்த குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதே நேரம், தடை உத்தரவு அமலில் உள்ளதால், அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய மழையால் இதமான சூழல் நிலவுகிறது. வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இது ஆறுதலை தந்துள்ளது.