ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு: தானியங்கி கேமரா வைத்து கண்காணிப்பு
பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி என நான்கு வனசரகங்களில் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.;
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில், தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின்படி பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி என நான்கு வனசரங்களில் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.தானியங்கி கேமரா மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி வனச்சரக வனப்பகுதியில் கிரேட் இரண்டில் 294 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 588 தானியங்கி கேமராக்களும், கிரேட் லைனில் இரண்டு கேமராக்கள் வீதம் 588 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது என கள துணை இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.
இதில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கேமரா பொருத்தம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.