நெகமம் பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணி
நெகமம் பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் நெகமம், சாலைப்புதூர், சிறுகளந்தை, காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், செஞ்சேரி பிரிவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களிலிருந்து பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகளும் கம்பெனிகளும் இருக்கின்றன. இதே சாலை வழியாகத் தான் பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனங்கள் வர, போக பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த சாலை மிகவும் மோசமானதாக மாறி குண்டும் குழியுமாக காட்சியளித்தது. வட சித்தூர் பிரிவிலிருந்து தாசநாயக்கன் பாளையம் வரை சாலை மிக மோசமானதாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த சாலையை செப்பனிடக் கோரி வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை வடசித்தூர் பிரிவு- தாசநாயக்கன்பாளையம் இடையேயான சாலையை புதுப்பிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வேலையும் துவங்கியிருக்கிறது.
சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் பணிகள் முடிவடைந்து சாலை புத்தம் புது தோற்றத்தை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.