பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் தோட்டத்தில் கலப்பட உரக்குடோனுக்கு சீல்

கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.;

Update: 2021-12-20 09:30 GMT

சீல் வைக்கப்பட்ட குடோன்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சியில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் அவரது தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் என்பவர் கோலப்பொடி தயாரிக்க வாடைக்கு குடோன் அமைத்து உள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி தாசில்தார் அரசகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது பேரில், குடோன் தாலுகா காவல் நிலைய போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்து விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வேளாண்மை துறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சோதனை செய்ததில் போலியாக தயாரிப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலியான தயாரித்த உரத்தை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படும், குடோன் உரிமையாளர் தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் குடோனுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News