மீன் பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி: போலீசார் விசாரணை
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக காளியப்பன் உடல் மீட்கப்பட்டது.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தனியார் தோட்டத்தில் காளியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி இருவரும் நண்பர்கள் ஆவர். நேற்று மதியம் முத்துப்பாண்டியும், காளியப்பணும் ஆழியார் அணை நவமலையில் உள்ள சொறுக்கல் பள்ளத்தில் மீன்பிடிக்க சென்று உள்ளனர். முத்துபாண்டி மட்டும் இரவு வீடு திரும்பி உள்ளார்.
காளியப்பன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காளியப்பனை தேடி வந்துள்ளனர். அவர் அணிந்திருந்த உடைகள் சொறுக்கல் பள்ளம் ஆற்றின் கரையோரப் பகுதியில் இருந்ததால் காளியப்பன் மனைவி ஆழியார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காளியப்பன் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக காளியப்பன் உடல் மீட்கப்பட்டது. மேலும் அவரது நண்பர் முத்துபாண்டியிடம் ஆழியார் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.