நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்த கணவன் கைது
Crime News in Tamil - பொள்ளாச்சியில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை, மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
Crime News in Tamil -பொள்ளாச்சி, டி. கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்,34. பெயிண்டர். இவரும், தந்தை பெரியார் வீதியை சேர்ந்த கவிதா,27, என்பவரும், 13 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சுரேஷூக்கு குடிப்பழக்கமும் இருந்ததால், ஐந்து மாதங்களுக்கு முன், இரண்டு மகன்களுடன், கவிதா தனது தாய் வீட்டுக்கு சென்றார். மாமியார் வீட்டுக்கு சென்று, தன்னுடன் வாழ வருமாறு, சுரேஷ் தனது மனைவியை அழைத்துள்ளார். கவிதா மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து, மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2