16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்: பெற்றோர் உட்பட 3 பேர் கைது
16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீராகுமார்(20) இவருக்கு கோவையை சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யபட்டு கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 16 வயது சிறுமிக்கு திருமண நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது. திருமணம் நடைபெற இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்ற அதிகாரிகள் குழந்தை திருமணம் நடைபெற்றதை அடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில சைல்டுலைன் அதிகாரிகள் புகார் அளித்தனர். சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் என பிரிவுகளில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.