பொள்ளாச்சி: ஆழியார் அணை நீர்மட்டம் மழையின்றி 75 அடியாக சரிந்தது

மழையின்றி வறட்சி நிலவுவதால், கோவை மாவட்டம் ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.;

Update: 2022-03-17 07:15 GMT

கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. மொத்தம் 120 அடியை கொண்டுள்ள அணையில், புதிய மற்றும் பழைய ஆயக்கப்பட்டு பாசனத்திற்கு, குறிப்பிட்ட நாட்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஜனவரிக்கு பிறகு மழையின்றி, வறட்சி நிலவுகிறது. மலைப்பகுதிகளிலும் மழையின்றி, நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 120 அடியுள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம், 75 அடியாக சரிந்தது.

கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு அணையில் நீர் இருக்கும் என்ற சூழல் உள்ளது. அணையின் பல பகுதிகளில் மணல் மேடுகள் தென்படும் அளவுக்கு நீர்மட்டம் சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  

Tags:    

Similar News