மருத்துவர்கள் தங்க வசதி கோரி கார்த்திகேய சிவசேனாதிபதி கோரிக்கை - மாவட்ட ஆட்சியர் ஏற்பு

Update: 2021-05-11 15:15 GMT

திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கையை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தங்க தடை ஏதுமில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் பொள்ளாச்சி பரம்பிக்குளம் பயணியர் மாளிகையிலிருந்து காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பது குறித்து அறிய வந்தேன்.

கொரோனா நோயாளிகளுக்குச் சேவை செய்து வரும் காரணத்தால், அரசு மருத்துவர்கள் இந்த தொற்று சூழ்நிலையில் தங்கள் இணையர். குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கவும். தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பயணியர் மாளிகையில் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக, நமது முதலமைச்சர் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை அளித்து வரும் இந்த தருணத்தில் அரசு மருத்துவர்களுக்கு இந்த முக்கியமான கட்டத்தில் தங்குமிடத்தை வழங்கத் தவறினால் அது சூழ்நிலையை மேலும் கடினமாக்கும். இந்த விடயத்தை ஆராய்ந்து தேவையானதைச் செய்ய உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்."இவ்வாறு தெரிவித்தார்.

அறிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக அதன் மேல் நடவடிக்கை எடுத்து "மருத்துவர்கள் பரம்பிக்குளம் பயணியர் மாளிகையில் தொடர்ந்து தங்கிக்கொள்ளலாம்" என்று உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவர்கள் நலன் சார்ந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News