கொரோனா நோயாளிகளுக்காக 2 ஆம்புலன்ஸ் வாகனம்- கோவை தன்னார்வலர்கள் உதவி
கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் சார்பில் 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன.;
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ அமைப்புகள் பலவும், தாமாக முன்வந்து பிபிஇ கிட், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வதர்கா, லெட்ஸ் தேங்க் பவுண்டேசன் அமைப்பு சார்பில், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், நம்ம மேட்டுப்பாளையம் அமைப்பின் மூலம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இலவச சேவைக்காக வழங்கப்பட்டது.
இதனை, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு செல்ல மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று, அமைப்பினர் தெரிவித்தனர்.