கோவையில் முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு அபராதம் - வனத்துறை நடவடிக்கை

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டைக்கு முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Update: 2021-06-09 06:34 GMT

கோவை செல்வபுரம் அருகே, முயல் வேட்டையாட முயன்று வனத்துறையினரிடம் பிடிபட்ட 5 பேர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரம் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வலைகளைக் கட்டி, முயல்களை பிடிக்க சிலர் முயன்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர், இதுதொடர்பாக திம்பம்பாளையம்புதூர் அழகேசன் மற்றும் நந்தினி காலனியைச் சேர்ந்த மயிலாம்பாறை, கார்த்தி, ராஜா, ராமு ஆகிய ஐந்து நபர்களை பிடித்தனர்.

முயல் வேட்டையாட முயன்ற ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துனர். மேலும் கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில்,  5 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News