பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.;

Update: 2024-06-27 03:45 GMT

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 9.3 செ.மீ. மழையும், வால்பாறை பிஏபி பகுதியில் 7.2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணை நிரம்பக் கூடிய சூழ்நிலையில் உள்ளது. அணைக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

எனவே பில்லூர் அணை திறக்கப்பட்டு பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மேலும் பவானி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News