மறைவுக்கு பிறகும் மனைவி மீது தொடரும் பாசம்; சிலை வைத்து வழிபடும் கணவன்

coimbatore news, coimbatore news today- சிறுமுகையைச் சேர்ந்த விவசாயி ஒருவர், இறந்த தனது மனைவிக்கு சிலை வைத்து, தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.;

Update: 2023-02-19 13:27 GMT

coimbatore news, coimbatore news today - திருமண பந்தம் என்பது, வாழ்வின் இறுதி வரை மட்டுமல்ல, அதற்கு பிறகும் அன்பால் வாழவே செய்கிறது. (கோப்பு படம்)

coimbatore news, coimbatore news today - கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இறந்த மனைவிக்கு சிலை வைத்து விவசாயி ஒருவர், பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

சிறுமுகை அடுத்த கணேசபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி 2 பேரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-1-2019 அன்று சரஸ்வதி குளியல் அறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இந்த அதிர்ச்சியை பழனிசாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பின்னர் தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்து, தினமும் நினைத்து கண்ணீர் சிந்தி வந்த பழனிசாமிக்கு, மனைவிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தீபம் ஏற்றி வழிபாடு இதைத்தொடர்ந்து பழனிசாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து, சரஸ்வதியின் உருவச்சிலையை ஓராண்டுக்கு பின்னர் நிறுவினார். 

தினமும் பழனிசாமி தனது மனைவியின் சிலைக்கு காலை, மாலை 2 வேளையும் தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார். வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்பதால், வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே மனைவியை நினைத்து வாழ்நாளை கழித்து வருகிறார். துக்க சம்பவம் நடந்து 3 நாள், 16 நாள் காரியங்கள் நடந்து முடிந்த பின்னர் அனைத்தையும் மறந்து விடும் இந்த காலகட்டத்தில், பழனிசாமி தனது மனைவி இறந்த பின்னரும் மறக்க முடியாமல் சோகத்துடனேயே வாழ்ந்து வருகிறார். 

இதுகுறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது:- திருமணமான நாள் முதல் கணவன், மனைவி 2 பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படவில்லை. என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து, அதில் உருவச்சிலையை வைத்து வழிபட்டு வருகிறேன்.

இதற்காக திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் சரஸ்வதி புகைப்படத்தை கொடுத்து, அவரை போலவே தத்ரூபமாக உருவச்சிலையை சிற்பமாக வண்ணம் தீட்டி வடிவமைத்தனர். மனைவி இறந்த பின்பு நினைவுகளுடன் வாழ்வதைவிட, ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் போது, அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமண பந்தம் என்பது, கணவன், மனைவி இருவரில் ஒருவரை காலம் பிரித்தாலும், அவர்களின் மறைவுக்கு பிறகும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பும், பாசமும் அவர்களுடன் வாழ்கிறது என்பதை, இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News