கைவிடப்பட்ட ஆப்ரேசன் பாகுபலி; திருப்பி அனுப்பப்பட்ட கும்கி யானைகள்
தொடர்ச்சியாக மழை காரணமாக ஒற்றை ஆண் காட்டு யானைக்கு காலர் ஜடி பொருத்த வனத்துறையினர் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஊருக்குள் சுற்றி வரும் பாகுபலி என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானைக்கு காலர் ஜடி பொருத்த வனத்துறையினர் முயற்சி செய்தனர்.
கடந்த ஜூன் 26ம் தேதி, பாகுபலி யானைக்கு காலர் ஜடி பொருத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்காலிகமாக காலர் ஜடி பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பாகுபலி யானை நெல்லிமலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதாலும்,தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் காலர் ஜடி பொருத்தும் பணியை வனத்துறையினர் கைவிட்டனர்.
காலர் ஜடி பொருத்தும் பணி கைவிடப்பட்டதால் இந்த பணியில் ஈடுபட டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வந்த கும்கி யானைகள் கலீம், மாரியப்பன், வெங்கடேஷ், மீண்டும் டாப்சிலிப் கொண்டு செல்லப்படுகிறது.
பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து, சரியான நேரம் கிடைத்தவுடன் மீண்டும் யானைக்கு காலர் ஜடி பொருத்தும் பணி நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.