திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தக்காளி பரிசு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
விலை மதிக்கத்தக்க பொருளாக தக்காளி இருப்பதால் தக்காளியை பரிசாக வழங்கியதாக அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.;
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணைத் தலைவராக இருப்பவர் மகேஷ்வரன். இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில், விலை மதிக்கத்தக்க பொருளாக தக்காளி இருப்பதால் தக்காளியை பரிசாக வழங்கியதாக அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.