கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு ; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

நேற்று ஒரே நாளில் 31400 க்கும் மேற்பட்டோருக்கு கேரளாவில் தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-26 11:30 GMT

கேரள எல்லையில் சோதனை

கொரொனா தொற்று பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்த கோவை, தற்போது கொரொனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மட்டுமே தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 31400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரொனா நெகட்டிவ் சான்றிதழ், இரு தடுப்பூசி ஊசி போட்டதற்கான சான்றிதழ் , இ பதிவு போன்றவை இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பிவிடப்படுகின்றது. உரிய சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாமல் அமர்ந்து வருபவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. உரிய சான்றிதழ்கள் இல்லாமல் வரும் நபர்களின் வாகனங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படுவதில்லை என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து இந்தக் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்தின் வழியாக தமிழகம் வரும் 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News