மத்திய அரசு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்திருத்தை மத்திய அரசு அமல்படுத்துவதாக தெரிவித்து, இன்று நாடு முழுவதும் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக பதாகைகள் வைத்தபடி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ஹாஜா ஹுசைன், நாடு முழுவதும் கொரொனாவால் உயிரிழந்து வரும் மக்களை பாதுகாக்காமல் குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்துவதில் நோக்கமாக மத்திய அரசு உள்ளது. அனைவரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் ஒதுக்கிவிடப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கோவையில் 500இடங்களில் போராட்டம் நடைபெருவதாகவும் தெரிவித்தார்.