பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு
குளம் நிரம்ப காரணம் திமுக அரசு எடுத்த நடவடிக்கை எனக்கூறி பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட வருவதற்கு, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.;
கோதவாடி குளத்தை பார்வையிட்ட பொள்ளாச்சி ஜெயராமன்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. இதனைப் பார்வையிட வந்த பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் இன்று காலை சென்றார். இதனிடையே குளம் நிரம்ப திமுக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம் எனக்கூறி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முற்றுகையிட்டனர்.
இந்த சூழலில், கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்களில் ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமன் நோக்கி செருப்பை எடுத்து வீசினார். இதனால் இருதரப்புக்கும் இடையே பதட்டமான சூழலில் நிலவியது. இந்த சூழலில், கூட்டத்தில் சிக்கியிருந்த பொள்ளாச்சி ஜெயராமனை அதிமுகவினரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை கண்டு பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.