மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. விசாரணை
கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.;
கேரளா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் போலி முகவரி மற்றும் தகவல்கள் அளித்து சிம் கார்டு பெற்றது தெரியவந்தது. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலி சிம்கார்டு வாங்கியது தெரியவந்தது.
கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக கோவை வெள்ளலூர் அருகேயுள்ள இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற கடையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவில் இருந்த வந்த அதிகாரிகள் கடை உரிமையாளர் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.