கோவை: க.க.சாவடி சந்திப்பு அன்பு கிளீனிக் சீல்..!

அனுமதியின்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை.;

Update: 2021-06-03 13:30 GMT

கோவை மாவட்டம் க.க.சாவடி சந்திப்பு பகுதியில் அன்பு கிளீனிக் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கிளீனிக்கை ஜெகதீஸ்வரி மற்றும் விக்ரமன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இங்கு தினேஷ் என்பவர் உதவியாளராகவும், பஞ்சவர்ணம் என்பவர் நர்ஸாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த கிளினிக்கிற்கு காய்ச்சல் என்று வரும் நோயாளிகளிடம் காய்ச்சலுக்கு இவர்களே சிகிச்சை அளித்ததோடு, சுகாதார துறையினருக்கும் தகவல் சொல்லவில்லை. எவ்வித அனுமதியும் பெறாமல் இரண்டு படுக்கைகள் கொண்டு நோயாளிகளுக்கு குளுகோஸ் ஏற்றி வந்துள்ளனர். இத்தகவல் தெரிந்து திருமலையம்பாளையம் ஆரம்ப சுகாதார அரசு மருத்துவர் அழகு ராஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் அன்பு கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News