கோவை அருகே கேரளா நோக்கிச் சென்ற ஸ்பிரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
A tanker lorry carrying spirit to Kerala overturned near Coimbatore;
கோவை வாளையாறு அருகே நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற "ஸ்பிரிட்" லோடு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து மது உற்பத்தி ஆலைக்கு சுத்த ஆல்கஹால் எனப்படும் "ஸ்பிரிட்" ஏற்றிக்கொண்டு 9 டேங்கர் லாரிகள் கோவை வழியாக கேரளா நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 7 லாரிகள் வாளையாறை கடந்து சென்ற நிலையில், பின்னால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (40) என்பவர், 25,000 லிட்டர் ஸ்பிரிட் லோடுடன் ஓட்டி வந்த டேங்கர் லாரி வாளையாறு தனியார் கல்லூரி அருகே வந்தபோது, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் மீது முதல் இருக்க வலது புறத்தில் லேசாக வண்டியைத் இருப்பதாக தெரிகிறது.
அப்போது பின்னால் வந்த மற்றொரு டேங்கர் லாரி பார்த்திபன் ஓட்டி வந்த டேங்கர் லாரி மீது மோதியது, இதில் நிலைதடுமாறிய முன்னால் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து டேங்கர் லாரியில் இருந்து ஸ்பிரிட் கசிந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையின் உடன் சென்ற கேஜி சாவடி போலீசார் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதையடுத்து பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக அனுப்பப்பட்டது. மேலும் அருகாமையில் யாரும் வராத அளவு பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லின் வாகனம் மூலம் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் பார்த்திபன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 லாரிகளில் தற்போது பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக கேஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.