கோவையில் தேமுதிக பிரமுகர் கார் தீ வைத்து எரிப்பு
போத்தனூர் காவல் துறையினர் விசாரணை
கோவை குறிச்சி ஜி.கே. ஸ்கொயர் பகுதியை சேர்ந்தவர் சின்னசேட் என்கிற கனகராஜ். இவர் தே.மு.தி.க குறிச்சி அவைத்தலைவராக உள்ளார். மேலும் கட்டிட ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது காரை, வீட்டு வாசலில் நிறுத்திச் சென்றுள்ளார். நிறுத்தியிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைந்தனர்.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் காருக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடியதாக சின்னசேட் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.