ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் யானை உயிரிழப்பு

பரிசோதனை முடிவுகளில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-12 15:45 GMT

உயிரிழந்த யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதாக கோவை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இறந்து கிடந்த பெண் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது யானையின் வாய் பகுதி மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து உடனடியாக யானைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். மேலும் யானையின் உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பபட்டது. பரிசோதனை முடிவுகளில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த யானைக்கு 13 வயது இருக்குமென வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News