நீட் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் : ஜி. கே. வாசன் வேண்டுகோள்..!

நீட் தேர்வை பொறுத்தவரை ஏழை எளிய மாணவர்கள் வெளி மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

Update: 2024-06-11 14:30 GMT

ஜி. கே. வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “மூன்றாவது முறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள். பண பலம். ஆட்பலம், அதிகாரம் பலத்தை மீறி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக வேண்டாம். மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News