கோவை மாநகரில் கனமழை காரணமாக அருவி போல சாலையில் ஓடிய மழை நீர்

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2024-10-13 13:15 GMT

சாலையில் வழிந்தோடிய வெள்ளநீர் 

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு  பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியும், சாலையில் ஆறு போல் ஓடிக் கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் சங்கனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கணுவாய் பகுதியிலிருந்து சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர் வருவதை காண முடிந்தது. இதனால் சங்கனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையில் அதிக அளவில் தண்ணீர் ஓடியது. இதனால் காலை நேரத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிறுவர்கள் பலர் அருவி போல் வந்த தண்ணீரில் குளித்து விளையாடினர். மேலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பதால் ஆபத்தான பகுதிகளுக்கு குளிக்கவும், மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News