தடுப்பூசி டோக்கன் முறைகேடுகளை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கோவையில், தடுப்பூசி டோக்கன் முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2021-07-17 07:15 GMT

வெள்ளக்கிணறு தடுப்பூசி மையத்தில்,  டோக்கன் வினியோகத்தை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகத்தின் போது முறைகேடு நடப்பதாகவும், ஒதுக்கப்படும் 200 தடுப்பூசிகள் முழுவதுமாக பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை எனவும், குறிப்பிட்ட அரசியல் கட்சியினரை கையாடால் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டது.

பொதுமக்கள், காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு டோக்கன் கிடைக்காமல் இருப்பதால் அதிகாரிகளுடனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கூடிய சம்பவங்களும் நடைபெற்றது. இதனை தவிர்க்கும் விதமாக, மாவட்ட நிர்வாகம் வரிசையில் நிற்கும் மக்களுக்கு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டது.

அதன்படி, கோவை வெள்ளக்கிணறு தடுப்பூசி செலுத்தும் மையத்தில் டோக்கன் வினியோகத்தை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒலிபெருக்கி வாயிலாக கொடுக்கப்படும் டோக்கன்களை, ஒன்றில் இருந்து 350 டோக்கன் வரைக்கும் கொடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News